மெக்னீசியத்தின் முக்கியத்துவம்
தசை மற்றும் நரம்பு செயல்பாடு, புரத தொகுப்பு, வலுவான எலும்பு மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு மக்னீசியம் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
வறுத்த பூசணி விதைகள் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, இந்த அத்தியாவசிய கனிமத்தின் அதிக அளவுகளைக் கொண்ட பல்வேறு வகை உணவுகள் உள்ளது. இதில் பூசணி விதைகளை விட மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளைக் காணலாம்
கீரை
இலை கீரை வகைகள் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த ஆதாரமாகும். இது சுமார் 87 மிகி அளவில் மக்னீசியம் உள்ளது
குயினோவா
இது மக்னீசியம் நிறைந்த சிறந்த சத்தான மூலமாகும். இதில் பூசணி விதைகளை விட அதிகமாக மக்னீசியம் உள்ளது. அதன் படி, குயினோவாவில் 197 மி.கி அளவு மக்னீசியம் நிறைந்துள்ளது
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸ் பருப்பு வகையானது மக்னீசியம் சத்துக்கள் நிரம்பியதாகும். இது பூசணி விதைகளை விட அதிகமான மக்னீசியம் சத்துக்களை வழங்குகிறது. இந்த வகை பீன்ஸில் 140 மி.கி அளவு மக்னீசியம் உள்ளது
வாழைப்பழங்கள்
இது ஒரு வசதியான மற்றும் சுவையான சிற்றுண்டி மட்டுமல்லாமல், மெக்னீசியத்தின் நல்ல ஆதாரமாகவும் விளங்குகிறது. நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 32-33 மில்லிகிராம் மக்னீசியம் நிறைந்துள்ளது
அவகேடோ
அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் சுவையானது மட்டுமல்லாமல், பூசணி விதைகளுடன் ஒப்பிடுகையில் அதிக மக்னீசியம் உள்ளடக்கத்தையும் தருகிறது
பாதாம்
இதில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பூசணி விதைகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவு மக்னீசியம் உள்ளது. பாதாமில் சுமார் 270 மி.கி மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது
முந்திரி
பூசணி விதைகளுடன் ஒப்பிடுகையில் முந்திரியில் அதிக மெக்னீசியம் உள்ளது. அதன் படி, முந்திரி சுமார் 260 மி.கி மெக்னீசியம் சத்துக்களைக் கொண்டுள்ளது
டார்க் சாக்லேட்
இதில் கோகோ சதவிகிதம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது அதிகளவு மக்னீசியத்தையும் தருகிறது. இதில் 176 மி.கி அளவு மெக்னீசியம் உள்ளது