உடலில் கால்சியம் குறைபாட்டின் காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், தசைப்பிடிப்பு, எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
பால் பொருள்கள்
பொதுவாக பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருள்கள் கால்சியம் நிறைந்த உணவுகளாகும். இவை எலும்பு வலுவாக உதவுகிறது
பாதாம்
சில பாதாம் வகைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், ஆரோக்கியமான அளவிலான கால்சியம் சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குகிறது
எள் விதைகள்
எள் விதைகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களுடன் கூடிய கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
ப்ரோக்கோலி
பச்சைக் காய்கறியான ப்ரோக்கோலியில் ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் போதுமான அளவிலான கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது. இவையும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்
இலை கீரைகள்
கேல், கோலார்ட் போன்ற இலை கீரைகள் உடலில் குறிப்பிடத்தக்க அளவிலான கால்சியம் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
வலுவூட்டப்பட்ட தானியங்கள்
பல்வேறு காலை உணவு தானியங்களில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பை வலுவாக்கலாம்