ஆண்கள் கீரை சாப்பிட்டால் இவ்வளவு கிடைக்குமா?

By Karthick M
27 Sep 2024, 04:16 IST

கீரை வைட்டமின் A, C, K இன் நல்ல மூலமாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, ஃபோலேட், புரதம் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளை நீக்குவதற்கு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் நன்மைகளை பார்க்கலாம்.

கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதை சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம்.

கீரை சாப்பிடுவதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பசலைக்கீரை சாப்பிடுவது லிபிடோவை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் ஆசையின் பற்றாக்குறையை நீக்குகிறது. விந்தணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

கீரை சாப்பிடுவது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவையும் மேம்படுத்துகிறது. ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனையையும் நீக்க உதவும்.