தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும் தான். பட்டாசு புகை ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்பது பலருக்கும் தெரியும். இதை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சுவாச பிரச்சனை
பட்டாசுகளின் புகை நுரையீரல் நோய், ஆஸ்துமா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியை மோசமாக்கும். இது சுவாச தொற்று அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
இதய பிரச்சினை
பட்டாசுகளின் புகை, இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் அரித்மியாவின் அபாயத்தை அதிகரிக்கும்.
காது, கண், மூக்கு, தொண்டை பிரச்சனை
பட்டாசுகளிலிருந்து காற்றில் உள்ள துகள்கள் இந்த பகுதிகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
புற்றுநோய்
பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்க மற்றும் நச்சு கூறுகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
கருச்சிதைவு
கருச்சிதைவு அபாயத்தைத் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் பட்டாசு வெடிக்கும் போது உள்ளே இருக்க வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சி
காற்றில் அதிகரித்த இரசாயன கலவைகள் குழந்தைகளின் வளர்ச்சியை குறைக்கலாம். பட்டாசுகள் ஒலி மாசுபாட்டையும் ஏற்படுத்தும். இது ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளின் தாக்கத்தை அதிகரிக்கும்.