காய்ந்த சிவப்பு மிளகாய் சாப்பிடுவதன் தீமைகள்!

By Devaki Jeganathan
16 Dec 2024, 13:08 IST

பலர் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சிவப்பு மிளகாயை அதிகம் பயன்படுத்துவார்கள். சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். தீமைகள் இங்கே_

தோல் பிரச்சினை

சிவப்பு மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். இதனால், சரும பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

கண் பிரச்சினைகள்

சிவப்பு மிளகாயை அதிகமாக சாப்பிட்டால் கண் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் வேண்டாம்

கர்ப்பிணிகள் சிவப்பு மிளகாயை சாப்பிடக்கூடாது. இது குழந்தைக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம்.

உடல் வெப்பநிலை அதிகரிக்கும்

சிவப்பு மிளகாயை அதிகமாக உட்கொண்டால் பிபி பிரச்சனை அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் வெப்பநிலையும் வேகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக, சளி மற்றும் இருமல் அபாயமும் அதிகரிக்கிறது.

தோல் மற்றும் முடிக்கு நல்லது

சிவப்பு மிளகாயை குறைந்த அளவில் உட்கொள்வது தோல் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக்குகிறது. ஏனெனில், அதில் வைட்டமின் ஏ, சி, ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை உள்ளன.

மூட்டு வலி நீங்கும்

சிவப்பு மிளகாயை குறைந்த அளவில் சாப்பிடுவது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.