நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனைகள் நிச்சயம் வரும். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் இங்கே.
அசைவ பிரியர்களில் பெரும்பாலானோர் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் சிக்கன் ஃப்ரை, சிக்கன் கறி, பிரியாணி, சிக்கன் 65 என பல வெரைட்டிகள் செய்து சாப்பிடுகிறோம். தினமும் கோழிக்கறி சாப்பிடுவதால் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னவென்று இங்கே காண்போம்.
உயர் இரத்த அழுத்தம்
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் நம் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் நமது உடலில் சோடியத்தின் சதவீதமும் அதிகரிக்கும். தோல் இல்லாத கோழியை விட தோலுடன் கூடிய கோழியை உண்பதால் இந்த ஆபத்து இன்னும் அதிகம். அதிகப்படியான சோடியம் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.
ஆய்வு கூற்று
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வின்படி, தினமும் கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் ஊட்டச்சத்து பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். பிராங்க் பாவ் கலந்து கொண்டார். தினமும் கோழிக்கறி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒரு நாளைக்கு 50 கிராமுக்கு மேல் கோழிக்கறி சாப்பிட வேண
இதயம் தொடர்பான பிரச்னை
தினமும் கோழிக்கறியை அதிகம் சாப்பிடுவதால், நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர்காலத்தில் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எடை அதிகரிப்பு
கோழியில் கலோரிகள் அதிகம். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைடு சிக்கன் போன்றவற்றை சாப்பிட்டால் அதிக ஆபத்து என எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் எண்ணெய், மசாலா மற்றும் பிற கொழுப்பு பொருட்கள் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இவை வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
எலும்பு பிரச்னை
கோழியில் புரதச்சத்து அதிகம். இருப்பினும் தினமும் சிக்கன் சாப்பிடுவதால் எலும்பு பிரச்சனைகள் வரலாம்.
உடல் சூடு
கோழி இறைச்சி சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு அதிகரிக்கும்.