அதிகமாக முந்திரி சாப்பிடுகிறீர்களா? ஆபத்து..!

By Ishvarya Gurumurthy G
23 Apr 2024, 08:30 IST

தினமும் முந்திரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும் இதனை அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அனைத்து உலர் பழங்களிலும் முந்திரி மிகவும் பிரபலமானது. முந்திரியின் சிறந்த சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பலர் நிறைய சாப்பிடுகிறார்கள். அவை நேரடியாக மட்டுமின்றி பல்வேறு சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

முந்திரியில் புரதம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது மற்றும் இது ஒரு நல்ல காலை உணவு என்று சொல்லலாம். அவை இதய நோய், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கின்றன மற்றும் பல நோய்களைக் குணப்படுத்துகின்றன. அப்படியானால் இவற்றை எந்த அளவு சாப்பிடலாமா? முந்திரி அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? இங்கே தெரிந்துக்கொள்வோம்.

முந்திரி பல்வேறு தின்பண்டங்களாக சந்தையில் கிடைக்கிறது. அதிக உப்பு முந்திரி சாப்பிடுவது உங்கள் உடலில் சோடியத்தை அதிகரிக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உண்மையில், உப்பு சேர்க்காத முந்திரியில் மட்டும் 3.4 மில்லிகிராம் சோடியம் உள்ளது. எனவே, அவற்றை அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

அதிக முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை எடை அதிகரிப்பு. நல்ல கொழுப்புகள் இருந்தாலும், கலோரிகள் அதிகம். 18 முந்திரியில் 160 முதல் 200 கலோரிகள் உள்ளன. எனவே இவற்றை சாப்பிட்டால் உடல் எடை எளிதில் அதிகரிக்கும். எனவே உடல் எடையை குறைக்க அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிக அளவு முந்திரி பருப்புகளை உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள ஆக்சலேட்டுகளால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு நாளைக்கு 28 கிராமுக்கு மேல் முந்திரி சாப்பிட வேண்டாம்.

முந்திரி பருப்பை அதிகமாக உட்கொள்வதால் சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்து என பல நல்ல பண்புகள் இருந்தாலும், தோலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரோஷியோல் போன்ற நச்சுப் பொருள் உள்ளது. இது மிகவும் தீங்கு விளைவிக்கும் டாக்ஸி. முந்திரியை அதிகம் சாப்பிடுவதால் சருமத்தில் சொறி, அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

முந்திரியை அதிகமாக சாப்பிடாமல், அளவோடு சாப்பிட்டு மகிழவும்.