நாள் முழுக்க ஜம்முன்னு இருக்கனுமா.? இந்த ஸ்நாக்ஸ் போதும்...

By Ishvarya Gurumurthy G
20 May 2024, 11:30 IST

நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணவும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும்.

சோளம்

சோளத்தில் கலோரிகள் குறைவாக இருக்கும். மேலும் இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது ஒரு திருப்திகரமான உணர்வை தருகிறது.

சோயாபீன்

சோயாபீன்களை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்து உங்களை முழுமையாக வைத்திருக்கும்.

சீஸ்

சீஸில் அதிக அளவிளான புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நட்ஸ்

நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. இது உடலுக்கு நிலையான ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதன் உண்மைதன்மை குறித்து அறிய சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.