பொங்கல் திருவிழா என்றால் கரும்பு இல்லாமல் இல்லை. இதில் எவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கு தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
கரும்பின் சத்துக்கள்
கரும்பில் கால்சியம், மெக்னீசியம், புரதம், ஜிங், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறந்துள்ளன.
எலும்பு வலிமை
கரும்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்குகிறது.
கல்லீரல் வலுபெறும்
கரும்பில் எலக்ட்ரோலைட்ஸ் நிறைந்துள்ளது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆற்றல் அதிகரிக்கும்
கரும்பில் உள்ள இயற்கையான இனிப்பு, உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கும். இது உங்களை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளும்.
மன அழுத்தம் குறையும்
கரும்பில் உள்ள பொட்டாசியம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை குறைக்கிறது. இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
புற்றுநோயை தடுக்கும்
கரும்பில் உள்ள ஃபிளவனோய்டுகள் உங்கள் உடலில் புற்றுநோய் செற்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.