குயினோவா உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தும்.
இரத்த சோகை தீரும்
குயினோவா இரத்த சோகை பிரச்னையை போக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள இரத்த சோகையை நீக்குகிறது.
தோலுக்கு நன்மை பயக்கும்
குயினோவா சருமத்திற்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் சருமத்தின் பொலிவு மேம்படும். கூடுதலாக, இது புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்குகிறது.
எடை இழக்க
குயினோவா உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து, எடையைக் கட்டுப்படுத்தும்.
சர்க்கரை கட்டுப்பாடு
நீரிழிவு நோயாளிகள் குயினோவாவை உட்கொள்ள வேண்டும். குயினோவாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
வீக்கம் குறைக்கிறது
உடலில் வீக்கத்தைக் குறைக்க குயினோவாவை உட்கொள்ளுங்கள். இதில் நார்ச்சத்து மற்றும் ப்யூட்ரேட் எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.