பப்பாளியின் பழம் தோல் விதை இலை என அனைத்திலும் ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே காண்போம்.
புற்றுநோயே வராது
பப்பாளி பழத்தில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
பப்பாளி பழத்தில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் இருதய அமைப்பைப் பாதுகாக்கும் மற்றும் HDL கொழுப்பின் பாதுகாப்பு விளைவை மேம்படுத்தும். இது இதய நோய்க்கான ஆபத்து குறைகிறது.
செரிமானம் மேம்படும்
பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி செரிமானத்தை எளிதாக்கும். இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் தீரும். இதற்கு பப்பாளி இலை மற்றும் பழத்தை சாப்பிடவும்.
சருமத்தை பாதுகாக்கும்
எந்த வகையான தோல் அமைப்பை கொண்டவர்களும் பப்பாளி விதை மற்றும் தோலை அரைத்து முகத்தில் தடவலாம். இது சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தை ஜொலிக்க செய்கிறது.
PCOS பிரச்னைக்கு தீர்வு
PCOS அதாவது சினைப்பை கட்டிகளுடன் போராடும் பெண்களுக்கு பப்பாளி ஒரு வரம் என்றே சொல்லலாம். இது கருப்பை சார்ந்த பிரச்னைகளை தீர்க்கிறது.