தினமும் ஒரு டம்ளர் சீரகத்தண்ணீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? இது குறித்து இங்கே விரிவாக காண்போம்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமான சீரகம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கல்லீரலுக்கு நல்லது
சீரகத்தில் உள்ள தைமோகுவினோன் கலவையானது, கல்லீரலில் அலற்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இது கல்லீரலை ஆரோக்கியமாக்குகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
சீரகம் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. மேலும் இது உங்கள் குடல் இயக்கத்தை ஆதரித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் சீராகும்
சீரகத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியம்
சீரகத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தை பாதுகாக்கிறது. இது முகப்பரு மற்றும் தோல் வெடிப்புகளை தடுக்கிறது.