ஜவ்வரிசி எதில் இருந்து கிடைக்கிறது? இதில் என்ன சதுக்கள் உள்ளன? இதனால ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.
ஜவ்வரிசி எதில் இருந்து கிடைக்கிறது?
மரவள்ளிக் கிழங்கை மாவு போல் செய்து, இயந்திர உதவியுடன் குட்டி குட்டி உருண்டை வடிவில் வெட்டுகிறார்கள். இது பதப்படுத்தப்பட்ட சைவ உணவாகும். இருப்பினும் இதில் பல நன்மைகள் உள்ளன.
ஊட்டச்சத்து விவரம்
ஜவ்வரிசியில் மாவுச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
எடை அதிகரிப்பு
நீங்கள் மெலிந்து காணப்படுகிறீர்கள் என்றால் ஜவ்வரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளவும். இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
செரிமானம் மேம்பாடு
செரிமான பிரச்னை உள்ளவர்கள் ஜவ்வரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை நீக்க ஜவ்வரிசி உதவுகிறது. நேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது.
உடல் குளிர்ச்சி
உங்கள் உடல் எப்போதும் வெப்பமாக இருக்கிறது? அப்போ உணவில் ஜவ்வரிசி சேர்த்துக்கொள்ளவும். இது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.