ஏலக்காய் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது தெரியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
தினமும் உணவில் ஏலக்காய் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.
செரிமானம் மேம்படும்
ஏலக்காய் சாப்பிடுவதால் செரிமான பிரச்னை தீரும். இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
மன அழுத்தம் குறையும்
ஏலக்காயில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. இது கார்டிசால் ஹார்மோனை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
சுவாச பிரச்னைகள் தீரும்
உங்களுக்கு சுவாச பிரச்னைகள் இருந்தால், ஏலக்காய் சாப்பிடவும். இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
அழகாக்கும்
ஏலக்காய் எண்ணெய் உங்கள் சருமம் மற்றும் முடிக்கு சிறந்த ஊட்டமளிக்கிறது. மேலும் இது உதடு வெடிப்புகளை தடுக்கிறது.