தலை முதல் கால் வரை.. முட்டையின் மகிமை இங்கே..

By Ishvarya Gurumurthy G
29 Aug 2024, 23:28 IST

எலும்பு வலிமை முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு வரை, தினமும் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.

கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்

முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகின்றன. இதனால் கண் பார்வை மேம்படுகிறது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முட்டையின் மஞ்சள் கருவில் புரதங்கள், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

மூளை ஆரோக்கியம் மேம்படும்

மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைக்க முட்டை உதவுகிறது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். இதனால் அவர்களின் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

இதய நோய் அபாயம் குறையும்

அமினோ அமிலம், ஹோமோசைஸ்டீன் போன்ற இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க, முட்டையில் உள்ள கோலின் உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

எடையை பராமரிக்க உதவும்

நீங்கள் முட்டை சாப்பிடும் போது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படாது. இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிட தேவை இருக்காது. இதனால் உடல் எடை குறையும்.

சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கும்

முட்டையில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து அழகாக்கும்.

முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், நீங்கள் முட்டை சாப்பிடுவதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.