சௌ சௌவில் இவ்வளவு நன்மைகள் இருக்குனு தெரிஞ்சா நீங்கள் அதை சாப்பிடாம இருக்க மாட்டீங்க. இது குறித்து அறிய பதிவை படிக்கவும்.
சௌ சோவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் B6, வைட்டமின் K, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.
எலும்புகள் வலுபெறும்
சௌசௌவில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுபெற செய்கிறது. மேலும் இது பற்களுக்கு நல்லது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சௌசௌவில் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது வைரஸ் நோயிடம் இருந்து உங்களை காக்க உதவுகிறது.
வீக்கத்தை குறைக்கும்
கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு கை மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சௌ சௌ சாப்பிடுவது உங்கள் வீக்கத்தை குறைக்க உதவும்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
சௌ சௌ சாப்பிடுவதால் குடல் இயக்கம் சீராகும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் தீரும்.
தைராய்டு பிரச்னை தீரும்
சௌ சௌவில் காப்பர் மற்றும் மாங்கனீஸ் உள்ளது. இது தைராய்டு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.