உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது முதல், நோய் எதிப்பு சக்தியை அதிகரிப்பது வரை, பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது.
பாதாம் பிசின் என்றால் என்ன?
பாதாம் மரத்தில் இருந்து வடியும் பசை, பாதாம் பிசின் என்று அழைக்கப்படுகிறது. இந்த பசையை காயவைத்தால் கட்டியாகும். இதனை தேவைப்படும்போது தண்ணீரில் ஊற வைத்து, ஜூஸில் கலந்து குடிக்கலாம்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
பாதாம் பிசினில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் சோடியம் உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து முழுமையாக அறிய பதிவை ஸ்வைப் செய்யவும்.
உடல் குளிர்ச்சி
பாதாம் பிசினில் இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாகும் திறன் உள்ளது. இது உடல் சூட்டை தனிக்க உதவும். மேலும் உடல் சூட்டால் ஏற்படும் வயிறு சார்ந்த பிரச்னைகளை தீர்க்க இது உதவுகிறது.
எடையை அதிகரிக்கும்
உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பாதம் பிசின் சாப்பிடுவது நல்லது. இதில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும்
பாதாம் பிசினில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலுல் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
இரத்த சோகை நீங்கும்
பாதம் பிசினில் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த எண்ணிக்கையை சீராக்கும். இதனால் இரத்த சோகை நீங்கும். மேலும் இரத்த ஓட்டம் மேம்படும்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் பாதாம் பிசினில் நல்ல அளவில் உள்ளது. இது உடலில் நோய் எதிப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
ஆரோக்கியமான சருமம்
பாதாம் பிசினில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்க உதவுகிறது. மேலும் சருமம் சார்ந்த பிரச்னைகளை போக்க உதவுகிறது.