இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் மன அழுத்தத்தை மேம்படுத்துவது வரை.. அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
அவரைக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் பி, காப்பர், மெக்னீசியம், ஃபோலியேட் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதய ஆரோக்கியம்
அவரைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
எலும்பு வலுபெறும்
அவரைக்காயில் கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வைட்டமின் சி நிறைந்துள்ள அவரைக்காயை நாம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்த எண்ணிக்கை
அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
செரிமானம் மேம்படும்
அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
மன அழுத்தம் நீங்கும்
அவரைக்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் பொட்டாசியம், உங்கள் மன அரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படாது.