ஓம விதைகளின் அற்புதமான நன்மைகள்.!

By Ishvarya Gurumurthy G
06 Apr 2024, 08:30 IST

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முதல் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது வரை... ஓம விதையின் நன்மைகள் இங்கே...

சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சை

மூக்கு மற்றும் தொண்டையில் தடையாக உள்ள சளியை வெளியேற்றுவதன் மூலம் நாசிப் பாதைகளை சுத்தம் செய்யும் திறன் ஓம விதைக்கு உள்ளது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

ஓம விதையில் உள்ள 'தைமால்' இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

ஓம விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், உடலின் பல பாகங்களில் வீக்கம் போன்ற பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

நச்சுக்களை நீக்கும்

கருப்பை மற்றும் வயிற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஓம நீர் நல்லது. இது ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை குணப்படுத்தும் சக்தி கொண்டது.