பால் கலந்த டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

By Devaki Jeganathan
10 Feb 2025, 13:05 IST

பலர் தங்கள் காலையை ஒரு கப் டீயுடன் தொடங்குகிறார்கள். பிளாக் டீ மட்டுமல்ல, பாலுடன் கூடிய ஸ்டாங்கான டீ நம்மில் பலருக்கு விருப்பமான தேர்வு. ஆனால், பால் கலந்த டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் தீமைகள் இங்கே_

வயிறு உப்புசம்

அதிக பால் சேர்த்து தேநீர் குடிப்பது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். ஏனெனில், தேநீரில் காஃபின் உள்ளது. இது பாலுடன் கலக்கும்போது அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இது வயிற்றுக்கு நல்லதல்ல.

எடை அதிகரிப்பு

பால் தேநீரில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

பதட்டம்

அதிகப்படியான பால் தேநீர் குடிப்பது மூளையில் ரசாயன ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இது பதட்டம் அல்லது மனநிலை தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழப்பு

அதிகமாக பால் டீ குடிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். இது பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு

அதிகப்படியான தேநீர் குடிப்பது இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

மன அழுத்தம்

தேநீர் அருந்துபவர்கள் தேநீர் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், தொடர்ந்து தேநீர் குடிப்பது மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் மனச்சோர்வைத் தூண்டும்.

தூக்கமின்மை

தொடர்ந்து பால் டீ குடிப்பது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு நினைவாற்றலையும் பலவீனப்படுத்தும்.