நிலக்கடலை எண்ணெய் தான் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது, இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. ஆனால் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது விலை சற்று குறைவு. இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதில் வைட்டமின்-இ மற்றும் ஸ்குவாலீன் போன்ற பொருட்கள் உள்ளன. இதை கொண்டு செய்யப்படும் உணவுகள் நிலக்கடலை எண்ணெயை விட 12-25% குறைவான எண்ணெயை உறிஞ்சும்.
பாமாயில்
இதில் லினோலிக் அமிலம் குறைவாக உள்ளது. எனவே இதை மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ரீபைண்ட் ஆயில்
இது நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. எனவே இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே பாமாயிலை ஒரு நாளும், இந்த எண்ணெயை மற்றொரு நாளும் பயன்படுத்துவது நல்லது.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் MUFA மற்றும் PUFA அதிகம் உள்ளது. இதில் எருசிக் அமிலம் என்ற ஆபத்தான பொருள் உள்ளது. பாகுத்தன்மையைக் குறைக்க மற்ற எண்ணெய்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது.
ஆலிவ் எண்ணெய்
இந்த எண்ணெய் விலை அதிகமாக இருந்தாலும், கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கிறது. இரத்தம் உறைதல் அறிகுறிகளைக் குறைக்கிறது. வயிற்றில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. சில வகையான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது.