வைட்டமின் பி12 நன்மைகள் என்ன? எதற்கு முக்கியம்?

By Karthick M
11 Oct 2024, 20:25 IST

உடலுக்கு மிக அத்தியாவசிய தேவையாக வைட்டமின் பி12 திகழ்கிறது. ஆனால் இதனை உடல் உற்பத்தி செய்யாது.

இதய ஆரோக்கியம்

வைட்டமின் பி12 உடலில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது குறைந்தால், ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரிக்கும்.

எலும்பு ஆரோக்கியம்

வைட்டமின் பி12 எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது குறைவதால், எலும்பு வலுவிழந்து மென்மையானதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும்.

மாகுலர் சிதைவு

இது இரத்த ஓட்டத்தில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தை குறைக்கும். மேலும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு அபாயத்தை குறைக்கும். 

இரத்த சோகை

சிவப்பு இரத்த அணுக்கள் சீராக இருக்கும் போது, வட்ட வடிவிலும் குறைவாக இருக்கும் போது முட்டை வடிவிலும் இருக்கும். இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமான கர்ப்ப காலம்

வைட்டமின் பி12 கருவில் குழந்தையின் மூளை, நரம்புகளை வளர்ச்சியடைய உதவுகிறது. இது குறைவாக இருந்தால், பிறப்பு குறைபாடு அல்லது கருச்சிதைவு ஏற்படும்.