பல சத்துக்கள் நிறைந்துள்ள கருப்பு கவுனி அரிசியை நாம் தினமும் உட்கொள்ளும் போது எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
புற்றுநோயை தடுக்கும்
கருப்பு கவுனி அரிசியில் அதிக அந்தோசயனின் நிறைந்துள்ளது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயினின்கள் மார்பகப் புற்றுநோய் உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றின் விரிவாக்கம் மற்றும் பரவும் திறனைக் குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்
கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் அந்தோசயனின், கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு அளவைக் குறைத்து இதயத் துடிப்பை சாதாரணமாகத் தக்கவைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
பார்வை ஆரோக்கியம்
கருப்பு கவுனி அரிசியைப் பயன்படுத்துவது கண்பார்வையை கணிசமாக மேம்படுத்துகிறது. கண் பாதிப்பைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் அந்தோசயினின்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
எடை குறையும்
கருப்பு கவுனி அரிசியில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும்
கருப்பு கவுனி அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது.