கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க நுங்கை சாப்பிடுங்கள். இது புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பல நன்மைகள் கொடுக்கும்.
கோடையில் கிடைக்கும் பழங்களில் நுங்கு மிகவும் முக்கியமான ஒன்று. அவை வெளியில் பழுப்பு நிறமாகவும், உட்புறம் வெள்ளையாகவும், பார்ப்பதற்கு ஜெல்லி போலவும் இருக்கும். இதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
சத்துக்கள் நிறைந்தது
நுங்கில் கால்சியம், பைட்டோநியூட்ரியண்ட்ஸ், வைட்டமின்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
புற்றுநோயை தடுக்கும்
நுங்கு பல்வேறு வகையான கட்டிகளை அகற்றும். இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் முடியும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எடையை குறைக்கலாம்
நுங்கில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவும். இதனால் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள். இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம்
நுங்கு கல்லீரல் பிரச்னைகளை குறைக்கிறது. இந்த பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
நீரிழப்பிலிருந்து நிவாரணம்
கோடைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நீர்ச்சத்து குறைவது சகஜம். ஆனால் முஞ்சாவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை சாப்பிட்டால் இந்த பிரச்னையில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்ப காலத்தில், சிலர் அஜீரண பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் நுங்கு சாப்பிட்டால் பலன் கிடைக்கும். செரிமான அமைப்பு சுறுசுறுப்பாக செயல்படுகிறது. மேலும் இது மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற உடல்நலப் பிரச்னைகளையும் நீக்கும்.
ஆரோக்கியமான சருமம்
கோடை வெயிலின் காரணமாக சிலருக்கு முகத்தில் சிறிய பருக்கள் வரும். இவற்றில் இருந்து நிவாரணம் பெற நுங்கு சாப்பிடுவது நல்லது. மேலும் இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
முடி வளர்ச்சி
முடி உதிர்வை தடுக்க நுங்கு உதவுகிறது. மேலும் மந்தமான முடியை சரி செய்கிறது. குறிப்பாக முடி உதிர்தல், வெள்ளை முடி மற்றும் வழுக்கையை தடுப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.