அத்தி இலை சாப்பிட்டால் இந்த 6 நோயகள் குணமாகும்!

By Ishvarya Gurumurthy G
08 Dec 2023, 22:29 IST

அத்தி இலைகளில் பக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதனை நீங்கள் சாப்பிட்டு வந்தால் சில நோய்கள் குணமாகும். அவற்றை இங்கே காண்போம்.

ஊட்டச்சத்து குறைபாடு குறையும்

அத்தி இலையில் மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ஊட்டச்சத்து குறைபாடை பூர்த்தி செய்யும்.

எலும்பு பலப்படும்

அத்தி இலையில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவாக்குகிறது.

மலச்சிக்கல் நீங்கும்

அத்தி இலையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தீரும்.

எடை குறையும்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தி இலைகளை உட்கொள்ளுங்கள். இதன் இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால் உடல் எடை விரைவில் குறையும்.

புற்றுநோயைத் தடுக்கும்

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களைத் தடுக்கின்றன. நீங்கள் புற்றுநோயைத் தவிர்க்க விரும்பினால், அதன் இலைகளில் இருந்து தேநீர் குடிக்கத் தொடங்குங்கள்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

அத்தி இலை தேநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் காரணமாக நோய்கள் உங்களை விட்டு விலகி இருக்கும்.