பேரிக்காயில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

By Devaki Jeganathan
18 Jul 2024, 16:30 IST

பேரிக்காய் ஆப்பிளைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பழம். சாப்பிட இனிப்பாக இருக்கும். இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, தாமிரம் மற்றும் இதர சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

குறைந்த கொழுப்பு

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. பேரிக்காயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பண்பு உள்ளது.

வலுவான எலும்பு

பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு தொடர்பான பிரச்சனையை குறைக்க உதவுகிறது. உடலில் கால்சியம் அளவை பராமரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சருமத்திற்கு நல்லது

பேரிக்காய் நம் உடலுக்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது உடலுக்கு ஆற்றலை வழங்கவும் செயல்படுகிறது. உங்கள் உணவில் அடிக்கடி பேரிக்காய் சேர்த்தால் சருமம் பளபளப்பாகும்.

கொழுப்பை குறைக்க

உடல் பருமன் பிரச்சனை இன்று மிகவும் தீவிரமாகி வருகிறது. இந்தப் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை சுலபமாக சரி செய்யலாம்.

செரிமானம்

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்

நீரிழிவு நோய்

பேரிக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், உள்ள நார்ச்சத்து மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு பிரச்சனையை குறைக்க உதவும்.

இரத்த சோகை

பேரிக்காயில் காணப்படும் இரும்புச் சத்தின் அளவு மிக அதிகம். குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு பேரிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சோகை குறைபாட்டைப் போக்க உதவுகிறது.