கடுகு கீரையில் இத்தனை நன்மைகளா?

By Ishvarya Gurumurthy G
29 Jan 2024, 14:14 IST

பல ஊட்டச்சத்துகள் நிறைந்த கடுகு கீரையை உணவில் சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம் வாருங்கள்.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

கடுகு கீரையில் ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்தும், மக்னீசியம், வைட்மின் கே மற்றும் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண் ஆரோக்கியம்

கடுகு கீரையில் ஆக்ஸிஜனேற்ற பன்புகள் நிறைந்துள்ளன. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

கடுகு கீரையில் வைட்மின் கே உள்ளதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்த கடுகு கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கடுகு கீரையில் வைட்டமின் சி உள்ளது. இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோய் தடுப்பு

கடுகு கீரையில் பினாலிக் கலவைகள், கரோட்டினாய்டுகள் மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.