நுங்கின் அற்புதமான நன்மைகள் இங்கே...

By Ishvarya Gurumurthy G
14 May 2024, 14:09 IST

கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நுங்கு சிறந்து செயல்படும். நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

நுங்கில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இது நீர்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நுங்கில் உள்ள ஏராளமான வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக பல வகையான நோய்கள் மற்றும் தொற்றுகளிடம் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

செரிமானத்திற்கு நன்மை

மலச்சிக்கல், வயிறு உப்புசம், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளால் சிரமப்படுபவர்களுக்கு, நுங்கு ஒரு வரம். இதில் உள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

நீரேற்றம்

அதிகரித்து வரும் வெப்பத்தால், மக்களின் உடல் பாதிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில், உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள நுங்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

நீரிழிவு மேலாண்மை

நுங்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

பலவீனமான வளர்சிதை மாற்றத்தால், மக்கள் எடை அதிகரிக்கத் தொடங்கி, உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த நார்ச்சத்து நிறைந்த பழத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை விரைவாக அதிகரிக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.