சியா விதைகள் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இந்த விதைகளில் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினசரி இதை சாப்பிட்டல் உடலுக்கு என்ன கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஏராளமான சத்துக்கள்
சியா விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி3 ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.
சியா விதைகளை 1 மாதம் சாப்பிடவதால் கிடைக்கும் நன்மை
சியா விதைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்தும். சியா விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு நன்மை பயக்கும்.
எடை இழக்கும்
சியா விதைகள் எடை இழக்க முக்கிய உதவியாக இருக்கும். இதை உட்கொள்வது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க உதவும்.
எலும்புகள் வலுவாகும்
சியா விதைகள் எலும்புகளை வலுப்படுத்த உதவும். இந்த விதைகளில் நல்ல அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
முழுமையாக படித்ததற்கு நன்றி
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும். சியா விதையில் இதுபோல் பல நன்மைகள் உள்ளது.