பாலில் கிராம்பு கலந்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா.?

By Ishvarya Gurumurthy G
05 Oct 2024, 14:52 IST

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், தினமும் பாலில் கிராம்பு அல்லது கிராம்பு பொடியை கலந்து குடிக்கவும். இதன் நன்மைகள் இங்கே.

வலியை போக்கும்

கிராம்பு பொடியுடன் பாலில் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதில் ஆன்டி- பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நல்ல அளவில் உள்ளன.

ஆற்றலை அதிகரிக்கும்

உடலில் உள்ள பலவீனம், சோர்வு நீங்க, கிராம்பு பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இதில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

ஆரோக்கியமான பற்கள்

பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. இது பற்களை பலப்படுத்துகிறது. அதே சமயம் கிராம்புகளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பற்களை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்லாமல் ஈறு பிரச்சனையையும் நீக்குகிறது. கிராம்பு பொடியை பாலில் கலந்து சாப்பிடவும்.

பசியை அதிகரிக்கும்

பலர் பசி குறைவாக உணர்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, கிராம்பு பொடியுடன் பால் கலந்து தினமும் குடித்து வரவும். இந்த கலவையில் இரும்பு, சோடியம், கார்போஹைட்ரேட், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

வயிற்றுக்கு

கிராம்பு பால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்க உதவும். இது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயுத்தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

எப்போது குடிக்க வேண்டும்?

சிறந்த பலன்களுக்காக, தினமும் இரவில் தூங்கும் முன் கிராம்பு பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இதனை உட்கொள்வதால் நல்ல தூக்கமும் கிடைக்கும்.