பாலில் பாதாம் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

By Karthick M
04 May 2024, 19:21 IST

பாலில் உள்ள கால்சியம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிக நன்மை பயக்கும். பாதாமை பாலில் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் உறுதி.

நோய் எதிர்ப்பு சக்தி

பால் மற்றும் பாதாமை கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்கிறது.

எடை அதிகரிக்க உதவும்

பாதாம் மற்றும் பால் உடல் எடையை அதிகரிக்க உதவும். ஒல்லியாக இருக்கிறோம் என கவலைப்படுபவர்கள் உணவில் தாராளமாக பாதாம் மற்றும் பாலை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆற்றல் அதிகரிக்கும்

பாதாம் மற்றும் பால் உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்

பாதாம் மற்றும் பாலில் நல்ல அளவு கால்சியம் உள்ளது. இதை உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்தும். எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு பாதாம் பால் நன்மை பயக்கும்.

பாதாம் மற்றும் பால் எப்படி உட்கொள்வது?

4 பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து அதன் தோலை நீக்கி பாலில் அரைத்து குடிக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த பாதாம் பொடியையும் பாலில் கலந்து குடிக்கலாம்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

பாதாம் பருப்புடன் பால் கலந்து குடிப்பது முடி, சருமத்திற்கும் நன்மை பயக்கும். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.