ஆப்பிள், பீட்ரூட், கேரட்டின் கலவையான இந்த ABC ஜூஸை தினமும் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? இதன் நன்மைகளை இங்கே காண்போம்.
இளமையான தோற்றம்
நீங்கள் தினமும் ABC ஜூஸ் குடித்து வந்தால், உங்கள் தோற்றம் இளமையாக இருக்கும். இது இளமையில் முதுமையை தடுக்கிறது.
பொலிவாக இருப்பீர்
நீங்கள் சருமத்தை இயற்கையாக பொலிவாக்க விரும்பினால், ABC ஜூஸ் குடிக்கவும். இது உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும்.
ஆரோக்கியமான கூந்தல்
ஆப்பிள், பீட்ரூட், கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. இதனால் உங்கள் தலை முடி ஆரோக்கியமாக வளரும்.
கழிவு வெளியேறும்
தினமும் ABC ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதனால் சருமம் மாசற்றதாக இருக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
ABC ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் தடிப்பு, பரு, சிவத்தல் போன்றவற்றை முற்றிலும் குணப்படுத்தும்.