வெயில் காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவது எவ்வளவு நல்லது?

By Devaki Jeganathan
29 Apr 2025, 11:32 IST

கோடை காலத்தில் மக்கள் முலாம்பழத்தை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். இதில், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த முலாம்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதய ஆரோக்கியம்

முலாம்பழத்தில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. அத்துடன் கேட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

முலாம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

கண்பார்வை மேம்படும்

முலாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்

முலாம்பழத்தில் உள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனுடன், சிறுநீரகத்தை மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம்பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இந்த பழம் கோடையில் ஏற்படும் பருவகால நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான சருமம் & முடி

முலாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தோல் மற்றும் முடிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் முடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

மூட்டு வலி நிவாரணம்

முலாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டுவலி நோயாளிகள் இப்பழத்தை சாப்பிடுவதால் நிவாரணம் கிடைக்கும்.

BP குறையும்

முலாம்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுதத்தை குறைக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் முலாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்து ஆகியவையும் இரத்த அழுத்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகிறது.