உடலில் அதிக யூரிக் அமிலம் காரணமாக கீல்வாதம் மற்றும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த அதிகளவிலான யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க காலையில் சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம்
இஞ்சி தேநீர்
இஞ்சி டீ அருந்துவது உடலில் இருந்து கூடுதல் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. இது மூட்டு வலியைக் குறைக்கிறது. இஞ்சி டீயில் சிறிது தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்
கிரீன் டீ
இது யூரிக் அமில உற்பத்தியைக் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த பானமாகும். அதிகபட்ச நன்மைகளைப் பெற தினமும் ஒரு கப் குடிக்கலாம்
ஆப்பிள் சாறு வினிகர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் வினிகரை கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள அதிகளவிலான யூரிக் அமிலத்தை உடைத்து செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது
எலுமிச்சை தண்ணீர்
இது யூரிக் அமிலத்தின் விளைவுகளைக் குறைத்து, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்
டிடாக்ஸ் வாட்டர்
வெள்ளரிக்காய் மற்றும் புதினா டீடாக்ஸ் தண்ணீரை நாள் முழுவதும் பருகலாம். இதில் வெள்ளரிக்காய் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. அதே சமயம், புதினா வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
குறிப்பு
இந்த காலை பானங்களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம், அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். எனினும், வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றி, சீரான உணவை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்