கூடுதல் உடல் எடையைக் குறைப்பதில் பலரும் பல வழிகளைத் தேடுகின்றனர். அவ்வாறு எடையைக் குறைப்பதற்கு உதவும் இயற்கை வழியாக சில ஆயுர்வேத பானங்களை முயற்சிக்கலாம். இதில் எடையைக் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்
ஆம்லா பானம்
ஆம்லா வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பானமாகும். இது உடலில் கொழுப்பை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனைத் தயார் செய்ய 1-2 தேக்கரண்டி புதிய நெல்லிக்காய் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்
வெந்தய விதை நீர்
வெந்தய விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. இதற்கு 1-2 தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, பின் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்
அஸ்வகந்தா பானம்
மன அழுத்தம் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்நிலையில், மன அழுத்தத்தைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு அஸ்வகந்தா ஒரு சிறந்த தேர்வாகும். இது மன அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது. 1 டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்
இலவங்கப்பட்டை நீர்
இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கு ஒரு கப் சூடான நீரில் 1-2 குச்சிகள் இலவங்கப்பட்டையைச் சேர்த்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, காலை உணவுக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கலாம்
திரிபலா டீ
திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் ஆகும். இது உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கு 1 டீஸ்பூன் திரிபலா பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, 5-10 நிமிடங்கள் ஊறவைத்து குடிக்கலாம்