நாம் உண்ணும் உணவு நமது பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுறவின் போது ஏற்படும் ஆற்றல் இழப்பை சரி செய்ய, உடலுறவுக்கு முன் சில பழங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. செக்ஸ்க்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சாக்லேட்
சாக்லேட் சாப்பிடுவதால் செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டும். இந்த ஹார்மோன் மூளையில் இரசாயன மாற்றத்திற்கு வழிவகுப்பதுடன் மகிழ்ச்சி, காமம், உறக்கம் உள்ளிட்ட உணர்வுகளை தூண்டும்.
மாதுளை
விந்தணு உற்பத்திக்கும், குழந்தை பாக்கியத்திற்கும் மாதுளை மிகவும் நல்லது. இதில், அதிக அளவு கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள், போலட் உள்ளது. உடலுறவின் போது உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும்.
பசலை கீரை
பசலை கீரையில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கக்கூடியது. மேலும், இதில் காணப்படும் இரும்புச்சத்து பெண்களின் ஆசை, புணர்ச்சி மற்றும் பாலியல் திருப்திக்கு உதவுகிறது.
தர்பூசணி
தர்பூசணி ஜூஸில் சிட்ரூலின் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது. இது ஆண்களின் விறைப்பு தன்மை குறைபாடு பிரச்சனைக்கு தீர்வு தரும்.
அவகேடோ
அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்டில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை நீண்ட நேர உடலுறவுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும். இந்த பழம் உங்களுக்கு நீடித்த மற்றும் மகிழ்ச்சியான உடலுறவுக்கு உதவும்.
பாதாம் பால்
பாதாம் இயற்கையாகவே ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை உடலுறவுக்கு முன் பருகுவது, ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனையை அதிகரிக்கும். மேலும், இது நீடித்த உடல் உறவுக்கு உதவியாக இருக்கும்.