மழைக்கால நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டி அடங்குகிறது. இதில் மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய வைட்டமின் டி உணவுகள் சிலவற்றைக் காண்போம்
காளான்கள்
காளான்கள் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். ஷிடேக் மற்றும் மைடேக் போன்ற சில காளான்கள் சூரிய ஒளியில் வெளிப்படும் போது இயற்கையாகவே வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. இது நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது
கீரை
கீரைகள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் மிகுந்ததாகும். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
பால்
இது வைட்டமின் டி-ன் சிறந்த மூலமாகும். மேலும், இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தினமும் இதை உட்கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்
உலர் அத்திப்பழம்
உலர் அத்திப்பழங்களில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் சிறிதளவு வைட்டமின் டி உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதன் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக போராட உதவுகிறது
ஆரஞ்சு
ஆரஞ்சு பழம் வைட்டமின் டி நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இது நம் உடலை செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது
முட்டைகள்
முட்டையில் குறிப்பாக மஞ்சள் கரு வைட்டமின் D சக்தி நிறைந்த மூலமாகும். இது நம் உடலில் வலுவான தசைகள், எலும்புகள், பற்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது
எண்ணெய் மீன்
சால்மன் அல்லது கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் மீன்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இதய நோய்கள், வயது தொடர்பான பார்வை இழப்பு போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது