வைட்டமின் சி சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது இரும்பை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
குடைமிளகாய்
குடைமிளகாயில் குறிப்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் வகைகள் வைட்டமின் சி நிறைந்த ஆதாரங்களாகும். சிவப்பு குடைமிளகாயில் சிட்ரஸ் பழங்களை விட அதிக வைட்டமின் சி நிறைந்துள்ளது
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி-ன் நல்ல ஆதாரமாகும். இது புத்துணர்ச்சியூட்டுவதுடன், ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாக அமைகிறது
ப்ரோக்கோலி
இது ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் சி நிறைந்த காய்கறியாகும். இதில் நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. உணவில் ப்ரோக்கோலியை வேகவைத்தல், வறுத்தல், சூப்கள் மற்றும் சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம்
கொய்யா
கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
கிவி
இது வைட்டமின் சி-ன் மற்றொரு மூலமாகும். இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதுடன், செரிமானத்தை அதிகரிக்கிறது. இதை சாலட்கள், ஸ்மூத்திகள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்