வெஜ் பிரியர்கள் சாப்பிட வேண்டிய வைட்டமின் பி12 உணவுகள்

By Gowthami Subramani
13 Apr 2025, 21:58 IST

வைட்டமின் பி12

உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. ஏனெனில், இது நரம்பு மண்டலத்தை இயக்குவதற்கும், இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது

குறைபாடு

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக சோர்வு, பலவீனம், இரத்த சோகை, மலச்சிக்கல், எடை இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

என்ன சாப்பிடலாம்?

வைட்டமின் பி12 அசைவ உணவில் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகும். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு குறைவான விருப்பத்தேர்வுகளே உள்ளது. எனினும் வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்ய உதவும் சில சைவ உணவுகளும் உள்ளன

ஓட்ஸ்

ஓட்ஸ் ஆனது நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாகும். இது உடலுக்கு வைட்டமின் பி12-யைத் தருகிறது

பீட்ரூட்

இது தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தவிர, வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதை பச்சையாக சாலட்டாக சாப்பிடலாம் அல்லது சாறு தயாரித்து உட்கொள்ளலாம்

காளான்

சில காளான் வகைகள் வைட்டமின் பி12-ன் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகிறது. இதை சாலட், சூப் அல்லது காய்கறிகளில் சேர்த்து தினமும் சாப்பிடலாம்

ஆப்பிள்

ஆப்பிளில் அதிகளவிலான வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அன்றாட உணவில் தினமும் ஒரு ஆப்பிளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி வைட்டமின் பி12 நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம். எனவே அன்றாட உணவில் தினமும் ப்ரோக்கோலியை சேர்த்துக் கொள்ளலாம்

இந்தத் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கூறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனினும் வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகளைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள மருத்துவரை அணுகலாம்