குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை பலர் தவிர்க்கிறார்கள். ஏனெனில், இது குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நமக்கு நோய் வரும் என்று நினைக்கிறார்கள். குளிர்காலத்தில் வெள்ளரி சாப்பிடலாமா வேண்டாமா என்பதை பற்றி பார்க்கலாம்.
சளி பிடிக்குமா?
குளிர் காலத்தில் பெரும்பாலான மக்கள் சளி மற்றும் இருமலுடன் போராடுகிறார்கள். இந்நிலையில், உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும்.
குளிர் அதிகரிக்கும்
உங்களுக்கு இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால், வெள்ளரிக்காய் சாப்பிட கூடாது. இது உடலில் உள்ள சளியின் அளவை அதிகரித்து, உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.
எப்போது சாப்பிடணும்?
வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், மதிய உணவில் வெள்ளரியை உணவோடு சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் அதை சாலட்டில் சேர்க்கலாம்.
உடல் நீரேற்றமாக இருக்கும்
வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அதை சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். குளிர்காலத்தில் நீங்கள் அதை குறைந்த அளவில் சேர்க்கலாம்.
குறைந்த கலோரி
வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. ஒரு சாதாரண வெள்ளரிக்காயில் 15-17 கலோரிகள் மட்டுமே உள்ளது. சாலட்டாகவும் சாப்பிடலாம்.
இரவில் சாப்பிட வேண்டாம்
வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. எனவே, இதை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
வயிற்றுக்கு நல்லது
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். உங்களுக்கு அசிடிட்டி பிரச்சினை இருந்தால் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.