வெயிலுக்கு இதமான வெள்ளரிப்பழம்! இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
09 Mar 2025, 20:02 IST

வெள்ளரிப்பழம் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் இதை உட்கொள்வது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் வெள்ளரிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

வெள்ளரிப்பழத்தில் வைட்டமின்கள் பி1, பி6, சி, காப்பர், ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது

எடையிழப்புக்கு

இந்த பழம் குறைந்தளவு கொழுப்புச்சத்து நிறைந்தாகும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது

நீரேற்றமாக இருக்க

வெள்ளரிப் பழம் நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாகும். இதை கோடைக்காலங்களில் உட்கொள்வது உடல் நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. அதிக வெப்ப காலங்களிலிருந்து உடலை குளிர்வித்து வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

நீரிழிவு நோய்க்கு

இந்த பழம் உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

வெள்ளரிப் பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை அன்றாட உணவில் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது

மலச்சிக்கலைப் போக்க

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிப்பழம் சேர்த்து கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இதை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்

கண் ஆரோக்கியத்திற்கு

இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்தவும், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. எனவே கண் ஆரோக்கியத்திற்கு வெள்ளரிப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்