உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வளர்ச்சிதை மாற்றம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமான வளர்ச்சிதை மாற்றத்தின் மூலம் உடல் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்
வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த சில ஆரோக்கியமான உணவுகள் உதவுகிறது. இதில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சில வெஜிடேரியன் உணவுகளைக் காணலாம்
பச்சை இலை காய்கறிகள்
கீரை, கேல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது
பருப்பு வகைகள்
இவை பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த சிறந்த மூலமாகும். இந்த வகை உணவுகள் தாவர அடிப்படையிலான புரதத்தைக் கொண்டுள்ளது. இவை இயற்கையான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
பாதாம்
பாதாம் அதிகளவிலான புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இவற்றை உட்கொள்வது பசியைக் குறைக்கிறது
ப்ரோக்கோலி
இதில் குளுக்கோராபனின் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்கிறது மற்றும் நாள்பட்ட மற்றும் வயது தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது
பெர்ரி
ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டதாகும். இது பசியைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது