மான்சூன் சீசனில் இம்யூனிட்டியை அதிகரிக்கும் காய்கறிகள்

By Gowthami Subramani
03 Jul 2024, 09:00 IST

பருவமழை காரணமாக அதிக ஈரப்பதம், அதிக மழையால் நீர் மாசுபடுதல் போன்றவற்றால் நோய்த்தொற்றுக்கள் அதிகமாக பரவுகிறது. இந்த காலகட்டத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். இதில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் காய்கறிகளைக் காணலாம்

கீரை

கீரையில் இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்களும், வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்றவையும் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

ப்ரோக்கோலி

இது ஒரு சிலுவைக் காய்கறியாகும். இதில் வைட்டமின்கள் சி, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

சிவப்பு குடைமிளகாய்

இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது

வெண்டைக்காய்

வெண்டைக்காய் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இவை நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலின் நோயெதிப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

பாகற்காய்

பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அதிக செறிவு காரணமாக, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இவை வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது