பச்சையாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் எது தெரியுமா?

By Devaki Jeganathan
12 Dec 2023, 14:36 IST

பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் வடிவில் சாப்பிடுகிறார்கள். ஆனால் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அவற்றை பற்றி பார்க்கலாம்.

பச்சை காய்கறிகள்

ஜிம்மிற்கு செல்லும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இவை நமது செரிமான முறையை கடினமாகும். சில சமயங்களில் விஷமாக கூட மாறும்.

காளான்

காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், இதை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவதால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படும். உருளைக்கிழங்கில் உள்ள சோலனைன் என்ற நச்சுப் பொருள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

வெண்டைக்காய்

ஓக்ரா என அழைக்கப்படும் வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்று வலி, வாயு மற்றும் புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை பச்சையாக சாப்பிடுவது உங்கள் வயிற்றை மோசமாக்கும். எனவே, ப்ரோக்கோலியை பச்சையாக சாப்பிட வேண்டாம். சமைத்து சாப்பிடுவது நல்லது.

கத்திரிக்காய்

கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவதால் குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படலாம். கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்று உபாதையும் ஏற்படுகிறது.