மழைக்காலத்தில் மறந்தும் இந்த காய்கறிகளைச் சாப்பிடாதீங்க!
By Kanimozhi Pannerselvam
25 Oct 2024, 12:35 IST
பச்சை இலை காய்கறிகள்
மழைக்காலத்தில் கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றில் நுண்ணுயிரிகளில் வசிப்பிடமாக மாறுகிறது. இது இரைப்பை குடல் தொற்று மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிலுவை காய்கறிகள்
காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஸ்பரட்ஸ் போன்ற காய்கறிகளின் பிளவுகளில் உள்ள ஈரப்பதம் பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கும். இதனை சுத்தப்படுத்துவதும் கடினமானது என்பதால் மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
கேரட், முள்ளங்கி,பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகள் பொதுவாக மழைக்காலத்தில் சாப்பிட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பருவத்தில் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், இந்தக் காய்கறிகள் அதிக நீரை உறிஞ்சிகெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.
முளைக்கட்டி பயிறுகள்
ஈரமான காலநிலையானது சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்களுக்கு ஒரு சிறந்த இனப்பெருக்கம் ஆகும், இது முளைக்கட்டிய பயிறுகளை எளிதில் மாசுபடுத்தும்.
மூலிகை இலைகள்
கொத்தமல்லி மற்றும் புதினா போன்ற மூலிகைகள் நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை மண்ணில் நெருக்கமாக வளரக்கூடியவை என்பதால், மழைக்காலத்தில் பாக்டீரியா மற்றும் பூச்சிகளால் மாசுபட வாய்ப்புள்ளது.
காளான்கள்
குறைவான நோயெதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்கள் மழைக்காலத்தில் காளான்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை ஜீரணிக்க சவாலானவை மற்றும் ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும்.
பட்டாணி, சோளம்
பட்டாணி மற்றும் சோளம் ஆகியவை மாவுச்சத்துள்ள காய்கறிகள். இருப்பினும் இவை மழைக்கால ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறக்கூடியது.
கத்தரிக்காய்
கத்தரிக்காய் எளிதில் பூஞ்சை நோய்கள் தொற்றுகு ஆளாகக்கூடியது. மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமானது என்பதால், கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.