தினமும் ஆட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு அதிக அளவு கொழுப்புகளை வழங்குகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
எடை அதிகரிப்பு
ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகும். இது அதிக எடைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆட்டிறைச்சியில் உள்ள சில வகையான புரோட்டீன்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் கட்டுப்பாடு பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.
யூரிக் அமிலம்
ஆட்டிறைச்சி அதிகம் சாப்பிடுவதால் பலருக்கு யூரிக் அமில அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உடலில் உள்ள ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மூட்டு வலியுடன் முழங்கால் வலியையும் உண்டாக்கும்.
புற்றுநோய் ஆபத்து
ஆட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சில வகையான புற்றுநோய் செல்கள் உருவாகும். இதனால் பல்வேறு வகையான புற்றுநோய்கள் மட்டுமின்றி பிற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிடக்கூடாது.