கீரைகளில் பல வகைகள் உள்ளன. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன. இதன் வகைகள் மற்றும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
வெந்தயக் கீரை
இதில் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த சோகையை தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ உள்ளதால், கண்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
புளிச்சக் கீரை
இதில் கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது உடலில் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
புதினா
இதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது இரத்த சோகையைப் போக்கும்.
மணத்தக்காளி கீரை
இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் உள்ளதால் வாய்ப்புண், குடல்புண் போன்றவை நீங்கும்.