தொங்கும் தொப்பை கரைந்தோடு இதை பண்ணுங்க!

By Karthick M
18 Jul 2024, 17:21 IST

பெரும்பாலான மக்கள் தொப்பையால் அவதிப்படுகிறார்கள். இதை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

தொப்பையை குறைக்க உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த வேண்டியது மிக முக்கியம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கியமான கொழுப்புகள்

தொப்பையை குறைக்க ஒமேகா-3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இதோடு வெந்தய நீரும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

செரிமானம் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்த உணவுக்கு முன் ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு

உணவில் காய்கறிகள், புரதம், கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

வாக்கிங்

தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்கள் நடக்க வேண்டும். இது எடையைக் குறைக்க உதவும். அதோடு இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கவும். இது இன்சுலின் மாற்றத்தை மேம்படுத்தும்.

இரவு நேர சிற்றுண்டியை தவிர்க்கவும்

தொப்பையை குறைக்க இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதோடு இரவில் ஏப்ஸ் அல்லது கார்டியோவை தவறாமல் செய்யுங்கள். இவை அனைத்தும் தொப்பையை குறைக்க உதவும்.