மாதுளையில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எந்த வகை மாதுளை சாப்பிடுவது நல்லது என பார்க்கலாம்.
எந்தவகை மாதுளை சாப்பிடலாம்?
மாதுளையில் இனிப்பு, புளிப்பு என இரண்டு வகை உண்டு. இதில் இனிப்பு மாதுளை சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
மாதுளையில் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வலிமையை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
விந்தணு எண்ணிக்கை
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதுளையில் உள்ளது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
செரிமான நன்மை
மாதுளை எளிதில் ஜீரணமாகும். பெருங்குடல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும் மேலும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை தடுக்கும்.
வெப்பத்தில் இருந்து நிவாரணம்
மாதுளையை உட்கொள்வது அதிக வெப்பம், தாகம் மற்றும் தோல் எரிச்சல் பிரச்சனையில் இறுந்து நிவாரணம் அளிக்கும். மாதுளையில் இதுபோன்ற பல நன்மைகள் இருக்கிறது.