சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
12 Jan 2025, 20:10 IST

அன்றாட உணவில் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

எடை இழப்பை ஊக்குவிக்க

சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளைக் குறைக்க உதவுகிறது. இந்த குறைந்த அளவிலான கலோரி உட்கொள்ளல் எடை இழப்பு அல்லது எளிதாக எடை மேலாண்மைக்கு வழிவகுக்கிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு

சர்க்கரையைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இது வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்

குடல் ஆரோக்கியத்திற்கு

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது குடல் பாக்டீரியாவின் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம். ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, ஈஸ்ட் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்நிலையில் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்

ஆற்றல் மேம்பாட்டிற்கு

சர்க்கரை உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கும் அதே வேளையில், அதைத் தொடர்ந்து ஒரு செயலிழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரையைக் குறைப்பதன் மூலம் ஆற்றல் அளவை மேம்படுத்தலாம்

சிறந்த தூக்கத்திற்கு

அதிக சர்க்கரை உட்கொள்ளல், குறிப்பாக மாலையில் உட்கொள்வது தூக்க முறைகளை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம். இந்நிலையில் சர்க்கரை சாப்பிடுவதைக் குறைப்பது நல்ல, சிறந்த தூக்கத்தைத் தருகிறது

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் கிளைகேஷனுக்கு வழிவகுக்கிறது. இது சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் புரதங்களான கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்துகிறது. எனினும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்